வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற போது அடுத்த ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அது எந்தவித எதிர்ப்புகளும் இன்றி, வாக்கெடுப்பில்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வரவுசெலவுத்திட்டத்தினை உறுப்பினர் எம்.லறீப் முன்மொழிய, சக உறுப்பினர் சனிஸ்டன் வழிமொழிந்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வசம் இருக்கும் வவுனியா நகரசபை வரவுசெலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை சேர்ந்த இ.கௌதமன் தவிசாளராகவும், சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி உப தவிசாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது