நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வரும் 'ரேஞ்சர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'கபடதாரி' இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ரேஞ்சர்'. இந்தப் படத்தை 'பர்மா', 'ஜாக்சன்துரை' 'ராஜா ரங்குஸ்கி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கி வருகிறார். 

நாட்டில் குறைந்து வரும் புலிகளை பாதுகாப்பது குறித்தும், சில ஆண்டுகளுக்கு முன் இந்திய காடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தும் 'ரேஞ்சர்' படம் தயாராகியிருக்கிறது. 

இந்தப்படத்தில் சிபிராஜுடன் நடிகைகள் ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி, நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலியன் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு,  அரோல் கரோலி இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அவுரா மகேஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

காட்டை  மையப்படுத்திய சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால் ' ரேஞ்சர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.