ஆப்கானில் பதிவான 39 படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலியா

Published By: Vishnu

19 Nov, 2020 | 10:00 AM
image

அவுஸ்திரேலிய சிறப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல்,  ஆப்கானிஸ்தானிடம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில் 23 சம்பவங்களில் 39 ஆயுதமேந்த நபர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார்.

கான்பெராவில் செய்தியாளர்களிடம் பேசிய காம்ப்பெல், 

25 அவுஸ்திரேலிய சிறப்பு படை ஊழியர்களால் 39 பேர் ஆப்கானில் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 23 சம்பங்களை உறுதிப்படுத்த நம்பகமான தகவல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பானர்வர்களில் சிலர் இன்னும் அவுஸ்திரேலிய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த கொலைகள் விரைவில் நியமிக்கப்படவுள்ள சிறப்பு புலனாய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் காம்ப்பெல் உறுதிப்படுத்தினார்.

அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானியுடன் பேசியதாக உரையாடலை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா 2002 முதல் ஆப்கானிஸ்தானில் படையினரை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10