ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் நக்ரோட்டா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டாவின் பான் பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே அதிகாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமாகியுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் நக்ரோட்டா பகுதியில் உள்ள பான் டோல் பிளாசா அருகே ஒரு வாகனத்தில் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சில துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஜம்மு மாவட்ட காவல்துறை தலைவர் ஸ்ரீதர் பாட்டீல் தெரிவித்தார்.

இந் நிலையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.