இரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy, 1941-2020) மாஸ்கோவில் இன்று மறைந்தார். 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தனது 79 வயதில் உயிரிழந்துள்ளார்.  

இவர் ரஷ்யாவில் மொஸ்கோவின் அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.

தொல்காப்பியம்  சமஸ்கிருத அடிப்படையை கொண்டதல்ல எனத் தெளிவாக எடுத்துரைத்த அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் என்ற பெருமை இவரையே சாரும்.