(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் தேசிய உற்பத்திகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி உற்பத்திகளை மட்டுப்படுத்த அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என  இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாங்கம் - செஹான் | Virakesari .lk

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதீடு தொடர்பில் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அரச ஊழியர்களுக்கு எவ்வித நிவாரணமும் வரவு - செலவு திட்டம் ஊடாக முன்வைக்கப்படவில்லை என  குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரச ஊழியர்களின் நலன்சார் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த வரவு -செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி உற்பத்திகளை மட்டுப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய உற்பத்தியாளர்களின்  முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த   இறக்குமதி உற்பத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன் . தேசிய உற்பத்திகளை பலப்படுத்தப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் என்றார்.