வரவு - செலவு திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் - வடிவேல் சுரேஸ்

Published By: Digital Desk 4

18 Nov, 2020 | 03:02 PM
image

(க.பிரசன்னா)

2020 ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1000 ரூபா வழங்கப்படுமென பிரதமர் வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிந்து தொழிலாளர்களை ஏமாற்றியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் 750 ரூபாவினை வேதனமாக பெறுகின்றனர். மேலதிகமாக பறிக்கும் கொழுந்துக்கு 40 ரூபா வழங்கப்படுகின்றது. அதேபோல இறப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கும் கிடைக்கின்றது. எனவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் அடிப்படைச்சம்பளமாக 1000 ரூபாவையே வழங்க வேண்டும். மொத்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு முனையக் கூடாது.

கூட்டு ஒப்பந்தத்துக்கும் இவ்விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்க வேண்டுமென நிதியமைச்சை கோருகின்றோம்.

தோட்டங்களை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து அரசாங்கம் குத்தகைக்கு பெற்றுள்ளதா அல்லது அரசாங்கத்திடமிருந்து தோட்ட கம்பனிகள் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே காலத்துக்கு மிகவும் பொருத்தமான முறையாகும்.

குறைந்தது 5 ஏக்கர் அளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு இம்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் தேயிலை தொழில்துறையும் பாதுகாக்கப்படும் தொழிலாளர்களின் கௌரவமும் பாதுகாக்கப்படும். இந்த 5 ஏக்கர் காணியினை அரசாங்கமே மக்களுக்கு வழங்க வேண்டும். கம்பனிகள் மூலம் வழங்கப்படக்கூடாது.

வெளியார் உற்பத்தி முறைமைக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவே மாற்ற வேண்டும். அதேவேளை வேதனத்தை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்களின் மீது வௌ;வேறு வகையில் அழுத்தங்களை திணிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அவற்றை கைத்தொழில் பேட்டைகளாக மாற்றியமைத்து பெருந்தோட்டத் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கு வரவு - செலவுத்திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

எனவே வரவு - செலவுத்திட்ட உரையில் முன்மொழிவதை மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் கூறப்பட்ட இக்கூற்றை நாங்கள் சட்டபூர்வமானதாக எண்ணி நம்புகின்றோம். மக்களுக்கு நியாயமான விடயங்கள் வரும்போது எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை நாம் ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22