இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை கண்டி பல்லேகலையில் நடைபெற்றபோது அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மதுபோதையில் மைதானத்திற்குள் நுழைந்து நிர்வாணமாக நடனமாடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்ட 26 வயதுடைய மேற்படி இளைஞரை பொலிஸார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

நேற்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்திருந்தபோது 3.00 மணியளவில் மழை குறுக்கிட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்திலேயே பார்வையாளர் கலரியில் போதையில் இருந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த மேற்படி இளைஞர் திடீரென மைதானத்திற் குள் நுழைந்து நிர்வாண கோலத்தில் நடனமாடியுள்ளார்.