மஸ்கெலியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரோடு தொடர்புபட்ட ஏழு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் சீனி தொழிற்சாலையில் வேலை செய்த குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கை வருவதற்கு முன் 16 ஆம் திகதி நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்ட வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றவருக்கு பி.சி. ஆர் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாததையடுத்து சுகாதார அதிகாரிகளினால் மஸ்கெலியா சுகாதார காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டு குறித்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந் நிலையில், குறித்த நபர் சென்ற வீடுகள் அவர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியின் குடும்பங்கள் என ஏழு குடும்பங்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM