பெருவின் புதிய ஜனாதிபதியாக பிரான்சிஸ்கோ சாகஸ்தி பதவியேற்றார்

Published By: Vishnu

18 Nov, 2020 | 10:42 AM
image

பெருவியன் சட்டமன்ற உறுப்பினர் பிரான்சிஸ்கோ சாகஸ்தி செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

பெருவின் இடைக்கால ஜனாதிபதியாக மானுவல் மெரினோ நியமிக்கப்பட்டதையடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவர் பதவி விலகினார்.

இந் நிலையிலேயே சாகஸ்தி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஏப்ரல் 11 ஆம் திகதி பெருவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் centrist Purple Party யின் சட்டமன்ற உறுப்பினரான சாகஸ்தி, அடுத்த ஆண்டு ஜூலை வரை தனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருவின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா மீது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தவறாக நிர்வகித்தமை, அரசாங்க ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையினால் அவர் நவம்பர் 10 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.

அதன் பின்னரே மானுவல் மெரினோ இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எனினும் அவரது நியமனம் மற்றும் மார்ட்டின் விஸ்கரா பதவி விலகியமையை கண்டித்து பெருவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மெரினோ பதவியேற்று ஆறு நாட்களின் பின்னர் பதவியிலிருந்து விலகினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28