வெளிநாட்டு தலையீடு மற்றும் ஒரு விரிவான தேர்தல் பாதுகாப்பு முயற்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் கிறிஸ் கிரெப்ஸை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் முன்வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தமைக்காகவே அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என அறிவித்த கிறிஸ் கிரெப்ஸை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளருடனான தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கும் டொனல்ட் ட்ரம்ப், வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்.