கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 12 ஐ சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர், வைத்திய நிபுணர் ஜி.எஸ். விஜேசூரியா தெரிவித்தார்.

அவர்களில் பணிக்குழாமை சேர்ந்த 5 தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழுவை சேர்ந்த 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய அனைவரும் சிறுவர்கள் மற்றும் தாய்மார்களாவர் எனவும் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.