யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவர சம்பவம் தொடர்பாக தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய குறித்த மாணவர்களுக்கு நீதிமன்றின் ஊடாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு அது பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது. இதனையடுத்து இச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள மாணவன் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மாணவர்கள் சார்பிலும் சிங்கள மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் கோப்பாய் பொலிஸார் மேலும் மூன்று தமிழ் மாணவர்களது விபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த கலவரச் சம்பவம் தொடர்பாக தமிழ் சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய தமிழ் மாணவர்கள் மூவரையும் சிங்கள மாணவர்கள் நால்வரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM