மீனை பச்சையாக உட்கொண்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

Published By: Digital Desk 4

17 Nov, 2020 | 07:42 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது.

இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்,  மீனொன்றை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.



மீன்களை உண்பதற்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இவ்வாறு மக்கள் அச்சம் கொள்வதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தங்காலை துறைமுகத்திலிருந்து தான் இந்த மீனை கொண்டு வந்ததாகவும் அதனை பச்சையாக உண்ண முடியும் எனவும் இதன் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில்  இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா  வைரஸ்  தொற்று  பரவும் நெருக்கடி நிலையில் மீனவ  சமூகத்தினர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏனெனில்  நாட்டு மக்கள் மீன்களை  கொள்வனவு செய்வதற்கு   அஞ்சுகின்றமையே  பிரதான காரணமாகும்.   ஆகவே  மீனவர்கள்  பாரிய  நெருக்கடியை  எதிர்கொண்டுள்ளனர்.

கொவிட்  19  தொடர்பான  விவாத்தின்  போது  நாடு பூராகவும் இருக்கும்  22 துறைமுகங்களையும் , பேலியகொட மீன்  சந்தையையும்  இரண்டு  நாட்களுக்கு மூடி  அவர்களுக்கு பீ.சிஆர்  பரிசோதனைகளை முன்னெடுத்து  உரிய  தரப்பினரை  மாத்திரம்  அந்த  பகுதிகளுக்குள்  அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சரிடம்    கூறியிருந்தேன். அதனை  அவர்  முன்னெடுக்கவில்லை.

அத்துடன், மினுவாங்கொட  ஆடைத்தொழிற்சாலைக்கு  இந்தியாவிலிருந்து ஊழியர்களை  வருவதற்கு  ஜனாதிபதி  அனுமதித்தமையினாலேயே  பேலியகொட  கொத்தணி  உருவாகியது.  அவர்களினாலேயே நாட்டில்  கொரோனா  தொற்றின்  இரண்டாம்  அலை  உருவானது. அதேபோல்  பேலியகொட கொத்தணியும்  உருவானது.

பேலியகொட மீன் சந்தையே நாட்டின்  மீன்  விநியோகத்தின் பிரதான  மத்திய  நிலையமாக  காணப்படுகின்றது.நாடளாவிய  ரீதியில்  உள்ள  அனைத்து  துறைமுகங்களிலிருந்தும்   சுமார்  500  வாகனங்களில் மீன்கள்  கொண்டுவரப்படுகின்றன.  நான்  அன்று  சுகாதார  அமைச்சரிடம் இது தொடர்பில்  கூறிய  போது அவர்  இதனை  கவனத்தில் கொள்ளவில்லை.

நாடு  பூராகவும் இருக்கும் மீனவமக்கள் அந்த அலட்சியத்தின் காரணமாக  தற்போது   பாரிய  வாழ்வாதார  நெருக்கடியை  எதிர்கொண்டுள்ளனர்.  மீனவத்துறை  அமைச்சு அந்த மீன்களை  தாம் கொள்வனவு  செய்வதாக  கூறியது.  ஆயினும் அந்த நடவடிக்கை  உரிய வகையில்  முன்னெடுக்கப்படவில்லை என்றே கூற  முடியும்.

அதேவேளை   மீன்களை மிக குறைந்த  விலைக்கு விற்க  வேண்டிய  நிலைமைக்கு மீனவர்கள்   தள்ளப்பட்டுள்ளனர். 12 இலட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர்.   , அவர்கள்  வாழ்வாதார பிரச்சினையை  எதிர்கொண்டுள்ள நிலையில்  இது வரையில்  நிவாரணம்  எதுவும்  அவர்களுக்கு இது வரையில் வழங்கப்படவில்லை என அவர்  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04