அமேசன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் 16 குழுக்களுக்கு 791 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இது குறித்த தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராமில் பதவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தனது “ பெசோஸ் எர்த் பண்ட் ” (Bezos Earth Fund) என்ற நிதியத்திலிருந்து ஒரு பகுதியாக 791 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க செயல்படும் 16 அமைப்புகளுக்கு வழங்குவதாக அறிவித்தார்,

மேலும்,

"கடந்த பல மாதங்களாக நான் நம்பமுடியாத புத்திசாலித்தனமான ஒரு குழுவினரிடமிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், அவர்கள் காலநிலை மாற்றம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதை தங்கள் வாழ்க்கையின் பணியாக மாற்றியுள்ளனர்" என்பதாகும் என பெசோஸ் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.

"... அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலிருந்து நான் ஈர்க்கப்பட்டேன், அவற்றை அளவிட உதவுவதில் உற்சாகமாக இருக்கிறேன், இப்போது நாம் அனைவரும் தைரியமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பூமியின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்," 

அமேசன் "காலநிலை உறுதிமொழிiயை" அறிவித்து ஒரு வருடம் கழித்து இந்த செய்தி வந்துள்ளது,  2025 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் 100 சதவிகிதம் இயங்கும் மற்றும் 2040 ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய கார்பனாக இருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் உறுதிப்பாடாகும்.

அமேசன் 100,000 மின்சார விநியோக வாகனங்களையும் வாங்கி அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் "காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான தீர்வுகள்" ஆகியவற்றுக்கு முதலீடு செய்துள்ளது.