வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு

Published By: Digital Desk 4

17 Nov, 2020 | 04:58 PM
image

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  குருக்களூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்டவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப்பட்ட முதிரை பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் முதிரைமரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக  பூவரசங்குளம்  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நேற்று(16) இரவு  அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினர் குறித்த மரக்கடத்தல்காரர்களை மடக்கி பிடிக்க சென்றபோது   குறித்த மரங்கடத்தல் காரர்கள் வாகனத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 09  முதிரை  மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகள் மற்றும் வாகனம் வவுனியா பூவரசங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28