(இராஜதுரை ஹஷான்)
அரச துறை ஊழியர்களின் தொழிற்சங்க மற்றும் அடிப்படை தொழிற்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையினை தயாரிக்க துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஆரப்பாட்டங்கள், எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் அரச நிர்வாகத்தின் தேசிய இலக்கிற்கு தடையாக உள்ளது.
1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடிந்தாலும் அரச நிர்வாகத்தில் அவ்வாறான பொறிமுறை கிடையாது.
சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் தீர்க்க தீர்ப்பு பொறிமுறைக்கு ஒத்ததான செயல்முறை அரச துறையின் பிணக்குகளை தவிர்க்க அரச துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM