ட்ரோன் கமராவில் இருந்து கண்காணித்ததில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 95 பேர் கைது செய்ய்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஜா - எல , கொட்டாஞ்சேனை, கெசல்வத்த, மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு 95 பேர்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரோன் கண்காணிப்பு கமரா காட்சிகள் மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.