ஸ்ரீ லங்கா ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரர் காலமானார். இவர் தனது 98 ஆவது அகவையிலேயே இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அத்தோடு இவர், தனது வாழ்நாட்களை பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துள்ளதுடன், அளப்பரிய சேவைகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.