துப்பாக்கி அனுமதி பத்திரம் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு : பாதுகாப்பு அமைச்சு

Published By: R. Kalaichelvan

17 Nov, 2020 | 02:17 PM
image

(க.பிரசன்னா)

2021 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான அனுமதியினையும் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான அனுமதியை புதுப்பிப்பதற்கான கால எல்லை 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட குறித்த புதுப்பித்தல் செயற்பாட்டை 2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்த போதிலும் இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காராணமாக அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால எல்லை 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான துப்பாக்கிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகியிருந்தாலும் மீள் புதுப்பித்தலுக்கான அபராதம் விதிக்கப்படமாட்டாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53