அதிக அளவில் முட்டை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிரித்தானிய ஜேனல் ஒப் நியூட்ரீசியன் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை சாப்பிடுவதால் இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

என்றாலும், முட்டை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

தற்போது உலகில் பெருமளவு மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் உள்ளன. 

இந்நிலையில், அதிக அளவில் முட்டை உட்கொண்டால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று பிரிரித்தானிய ஜேனல் ஆப் நியூட்ரீசியன் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

50 வயதுக்குட்பட்ட 8 ஆயிரத்து 545 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் அதிக முட்டைகளை உட்கொண்ட 60 சதவீதமானோரிடம் நீரிழிவு நோய் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.