(செ.தேன்மொழி)

நெலுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லவ மேற்கு பிரிவில் நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொரவக பகுதியைச் சேர்ந்த 24,50 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும்,ஈய உருண்டைகள் மற்றும் 3 கிராம் வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.