நீதி­யான சமூ­கத்­திற்­கான அமைப்பின் தலை வர் மாதுலு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போது அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை விசாரணை செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சோபித தேரரின் மரணம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள விசா­ரணைக் குழு இந்த தீர்­மா­னத்­துக்கு வந்­துள்­ளது. அதன்­படி மாது­ளு­வாவே சோபித்த தேர­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த பல வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய விசா­ரணைக் குழு­வுக்கு நேற்று அனு­மதி வழங்­கி­யுள்ளார்.

சோபித்த தேரரின் மரணம் குரித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குழுவின் தலை­வ­ரான கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்கஇ நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­யி­ய­விடம் முன்­வைத்த எழுத்து மூல கோரிக்­கையை ஆராய்ந்தேஇ சிகிச்­சை­ய­ளித்த வைத்தியர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.