Published by T. Saranya on 2020-11-16 16:09:06
வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட கால அவகாசம் முக்கிய கட்டுப்பாடுகளைக் கொண்டு இருந்தது.
இது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அழைப்புகளை மீண்டும் ஆரம்பிக்க குழுவினரை கட்டாயப்படுத்தும்.
ஸூம் போட்டியாளர்களில் பலர் கூகுள் மீட் (60 நிமிட வரம்பு) உட்பட இதே போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அத்துடன் அனைத்து வழங்குநர்களும் நிறுவன தர திட்டங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள், அவை வரம்பை நீக்கி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்குகின்றன.
ஸூம் நாற்பது நிமிட கால எல்லையை நீக்கும் செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving Day) அன்று (நவம்பர் 26) நள்ளிரவு முதல் நவம்பர் 27 அன்று காலை 6 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.