போலிச் செய்திகள்

Published By: Gayathri

16 Nov, 2020 | 01:05 PM
image

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பெரிதும் குழம்பிப்போய் உள்ளனர். இந்த சூழலில் மக்களை மேலும் அச்சமடையச் செய்யும் வகையில் போலியான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவது சமூகவிரோத செயல்களாகவே பார்க்கப்படும்.

அந்த வகையில் இலங்கையில் கொரோனா காரணமாக பொது மக்கள் வீதிகளில் செத்து மடிவதாக புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில்  பதிவேற்றிப் பரபரப்பை ஏற்படுத்திய நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கண்டி கடுகண்ணாவை கடவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே போலியான பதிவை மீண்டும் பதிவிட்டு சமூகத்தில் பீதியை ஏற்படுத்திய மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது பதிவை தொடர்ந்த மேலும் நால்வரை  கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொறுப்பற்ற வகையில் செய்திகள் தகவல்களை வெளியிடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகள் எந்தளவு தூரம் ஆபத்தானவை என்று தெரிந்திருந்தும் அவ்வாறான செய்திகளை வெளியிடுவது பாரதூரமான குற்றமாகும்.

இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் தேசிய ஊடகங்கள் வாயிலாக வழங்கியுள்ள போதிலும் ஒரு சிலர் அதன் பாரதூரத்தை உணர்வதாக தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உடனடியாக மக்களை சென்றடைவதன் காரணமாக அதன் தாக்கம் அதிகம் என்பதால் அது தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது.

இத்தகைய செயல்கள் காரணமாகவே கடந்த காலங்களில் அவ்வப்போது சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய நிலைமை கடந்த அரசுக்கு ஏற்பட்டது. 

குறிப்பாக பேஸ்புக், யுடியூப்  போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் நல்ல நோக்கங்களின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பிறரின் அந்தரங்கங்களை துருவி ஆராய்ந்து வெளிப்படுத்துவதாகவும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாகவும் அமையக்கூடாது.

ஒரு சிலர் அதனை உணராது தம் மனம் போன போக்கில் சமூகத்திற்கு பயன் தராத தவறான பதிவுகளை பதிவேற்றம் செய்து தாமும் குழம்பி மக்களையும் குழப்புகின்றனர்.  

இதனால் மக்கள் மத்தியில் அநாவசியமான பதற்றங்கள் ஏற்படுகின்றன.

அனைத்துக்கும் மேலாக போலியான செய்திகளை பரப்பினால் எத்தகைய தண்டனைக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதையும் மனதில் கொள்வது அவசியம்.

சமூக ஊடகங்கள் தொடக்கம் அனைத்து ஊடகங்களையும் அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவது, அவை எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களை தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்பதற்கே ஆகும். 

எனவே அதனை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும். அன்றேல் சட்டத்தின்  கடுமையான பிடிக்குள் சிக்க வேண்டி வரும் என்பதையும் மறந்து போகக்கூடாது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04