வடமராட்சியில் தீபாவளித் திருநாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் படுகாயமடைந்த 18 பேர் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

துன்னாலை, அல்வாய், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர்.

தீபாவளித் திருநாள் நேற்று முன்தினம் இந்துக்களால் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.

வடமராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளால் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றது.