திடீர் திருத்த வேலைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 11 1/2 மணிநேர நீர்வெட்டு நாளை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி நாளை காலை  8.30 முதல் இரவு 7.30 வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொதுபிட்டி, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, பெந்தோட்டை, போம்புவல, பயாகலை, பேருவளை, மக்கொத்த, அழுத்கம ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.