கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் வீதிகளில் பலர் உயிரிழந்து கிடந்ததாக சமூக ஊடகங்ளில் போலியான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

28 வயதான மேற்படி நபர் நேற்றைய தினம் ஹந்தனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.

முன்னாதாக இவ்வாறு போலிச் செய்தியை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடுகன்னாவை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், குறித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.