சிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரியும் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சராக இருந்தவருமான வலீத் அல்-மொலேம் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரச தொலைக்காட்சி இன்று திங்கட்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணங்கள் கூறப்படாத நிலையில், 79 வயதான வலீத் அல்-மொலேமின் பல ஆண்டுகளாக இருதய பிரச்சினைகளினால் உடல்நலப் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

மொலேம் முதன்முதலில் வெளியுறவு அமைச்சராக 2006 இல் நியமிக்கப்பட்டதுடன் துணை பிரதமர் பதவியையும் வகித்தவர் ஆவார்.