பதவியேற்ற ஆறு நாட்களின் பின் பதவி விலகுவதாக பெரு ஜனாதிபதி அறிவிப்பு!

Published By: Vishnu

16 Nov, 2020 | 07:47 AM
image

பதவியேற்ற ஆறு நாட்களுக்குப் பிறகு பதவி விலகுவதாக பெரு நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட மானுவல் மெரினோ தெரிவித்துள்ளார்.

மானுவல் மெரினோவை பதவி நீக்கக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் பெருவில் அரங்கேறி வருகின்ற நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி உரையொன்றின்போது அறிவித்துள்ளார்.

பெருவின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா மீது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தவறாக நிர்வகித்தமை, அரசாங்க ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையினால் அவர் நவம்பர் 10 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.

விஸ்காரா பதவி விலகியதையடுத்து அதிர்ச்சியடைந்த எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், பொலிஸாருடன் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததுடன், குறைந்தது 92 பேர் காயமடைந்ததாகவும் பெருவின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையிலேயே மெரினோ இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

பெருவில் கொரோனா பரவல் ஆரம்பமாகியதிலிருந்து, ஒரு கட்டத்தில் மிக உயர்ந்த தனிநபர் இறப்பு எண்ணிக்கையை கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 932,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 35,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32