அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன்  வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த வெற்றி தேர்தல் மோசடியினால் பெறப்பட்டது  என குற்றம் சுமத்தியுள்ளார்.  

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து, தேர்தலில் ஜோ பைடன் அதிக கல்லூரி வாக்குகள் பெறுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் ட்ரம்ப்  அதனை தேர்தல் மோசடி என குற்றம் சுமத்தியதுடன் நீதிமன்றத்தையும் அணுகியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்றும் ட்ரம்புக்கு ஆதரவாக அணிதிரண்ட ஆர்ப்பாட்ட காரர்கள் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தமகுக்கு மீண்டும் ட்ரம்பின் ஆட்சி வேண்டும் எனவும் பதாதைகளை ஏந்தியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Image

இதனிடையே, ட்ரம்ப், ஜோ பைடனின் வெற்றியை முதன்  முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவ் வெற்றி தேர்தல் மோசடியினால் இடம்பெற்று உள்ளதாக மீண்டும் குற்றம் சுமத்தியிள்ளார். வாக்கெண்ணும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ஃப்க்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

‘அவர் (ஜோ பைடன்) வெற்றிபெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் வாக்கு கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதிபெற முடியாது (நான் அதிகவாக்குகளில் வெற்றிபெற்ற இடம்). மேலும், போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றிபெற்றுள்ளார். என தெரிவித்துள்ளார்.