ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை தொடர அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும். தேசிய அரசாங்கத்தை இரண்டு ஆண்டுகளுடன் கலைப்பது நாட்டின் நிலைமைகளை குழப்பும் செயலாகும். எனவே ஐந்து ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராயும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இலங்கை தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புரிந்துணர்வு உடன்படிக்கைகளை நீட்டிக்குமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.