நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருநாகலை, களுத்துறை, கேகாலை மாவட்டங்களின் 7 பிரதேசங்கள் இன்று (15) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 

குருநாகலை மாவட்டத்தின் குருநாகலை நகராட்சி மன்ற பகுதி, குளியாபிடிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட உள்ளது. 

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட ‍மேற்கு கிராமசேவகர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட உள்ளது. 

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு,  மாவனெல்லை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட உள்ளது.