கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகள் நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  களனி பொலிஸ் பிரிவு திங்கட்கிழமை 16 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை அதிகாலை 05 மணி முதல் கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.