சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்த கைப்பையை, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து, ஒப்படைத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணினுடைய 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பை, நேற்று  முற்பகல்11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தது.

இதனைக்  சேருநுவர பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த, கே.டீ.கே.ரம்யலதா என்ற பெண் கண்டெடுத்துள்ளார்.

திருகோணமலை, சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போன, பணப்பையை குறித்த பெண், சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.வசந்த குமாரவின் முன்னிலையில், உரிய பெண்ணிடம் ஒப்படைத்ததாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.