கற்பிட்டி தழுவ கடற்பகுதியில் அரிய வகை புள்ளி சுறா ஒன்று இன்று காலை உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில், கரையொதுங்கிய புள்ளிச் சுறாவானது சுமார் 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்டதாக காணப்படுவதுடன் 15 அடி நீளமுடையதாக காணப்படுகின்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.