விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மாஸ்டர் 'படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் டீசர் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுக்கு தீபாவளி பரிசாக இன்று மாலை 6 மணி அளவில் சன் ரி வி மற்றும் சன் நெக்ஸ்ட் இணையதளத்தில் வெளியாகிறது.
திரை அரங்குகளிலும் இன்று மாலை 6 மணி அளவில் 'மாஸ்டர்' டீசர் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் டீஸர், விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான அரசியல் ரீதியான சர்ச்சைகள் ஏற்பட்டதாலும், இதன்காரணமாக 'மாஸ்டர்' படத்தின் வணிகம் பாதிக்கப்படும் என திரையுலகினர் விமர்சித்து வரும் நிலையிலும் வெளியாகிறது.
இதனிடையே இப்படத்தின் தொலைக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் ரி வி பெற்றிருப்பதால், அதன் இணைய தளங்களில் இப்படத்தின் டீசர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியாகும் இப்படத்தின் டீசரை உலக அளவில் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும் என்ற சாதனைக்கு அவரது ரசிகர்கள் தற்போதே உற்சாகத்துடன் தயாராகி இருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM