அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி முதல் 2 வீதமாக அதிகரிப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

ஒக்டேபர் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை பதிவேற்றப்பட்ட தகவல்கள் தவறானவையாக  இருக்கக்கூடும் என்று வகைப்படுத்தப்பட்டு அந்தப் பதிவுகளுக்கு அருகே குறியீடுகள் பதிவிடப்பட்டுள்ளன.

சுமார் 300 ஆயிரம் டுவிட்டர் பதிவுகளில் 450 க்கும் மேற்பட்டவற்றின் மீது எச்சரிக்கைச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பயனர்கள் அவற்றைப் பகிர முடியாதபடி சில வசதிகள் முடக்கப்பட்டன.

குறிப்பாக அமெரிக்க தேர்தலுக்கு அடுத்து வந்த நாள்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் பதிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை நிறுவனம் பொய்த்தகவலாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.