bestweb

லிபியாவில் கடலில் கவிழ்ந்த இரு படகுகள்: 94 அகதிகள் பரிதாபமாக பலி!

Published By: Jayanthy

14 Nov, 2020 | 01:41 AM
image

லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற  இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உயிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Migrants struggle desperately in the water on Wednesday after their inflatable vessel started to sink - it was laden with 116 people

 லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட  குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குறித்த விபத்தில் படகு கவிழ்ந்து  74 குடியேற்றவாசிகளை பரிதாபமாக உயிரிழந்தனர். 

Spanish rescuers come to the aid of migrants in the Mediterranean on Friday

இதே போன்று 50க்கும் அதிகமான குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட மற்றுமொறு படகு, தலைநகர் திரிபோலில் இருந்து வடகிழக்கு பதியில் அமைந்துள்ள சோர்மன் என்ற நகரின் கரையில் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன்  எஞ்சியோர் அப்பகுதி மீனவர்களால்  மீட்கப்பட்டுள்ளனர்.

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 

NGO Proactiva Open Arms members recover a dead body of a migrant rescued from the Mediterranean on Wednesday

இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்

எனினும் இந்த ஆண்டு இதுவரை, மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றனர் 800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 72,669 பேர்  வெற்றிகரமாக கடலை கடந்து சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது...

2025-07-18 08:02:09
news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13