மாலபே தனியார் கல்லூரியை பகுதியளவில் அரச உடைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் உடன்படபோவதில்லை என தெரிவித்த, அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர, 

மாலபே பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளால் அரச பல்கலைகழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி நாளைய தினம் நுகேகொடையில் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.