நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண் ஒருவரும், சிலாபத்தைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும், ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 வயது மற்றும் 64 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.