பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வயது நிரம்பிய சிறுவனின் சடலம் இன்று காலை  கிளிநொச்சி புதுமுறிப்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

விஜிமன் கனீஸ்ரன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   

இன்று காலை காணியில் பெற்றோருடன் இருந்த குறித்த சிறுவன் எதிர்பாராத விதமாக பக்கத்து காணிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்த கிணற்றிலே வீழ்ந்து  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் கல்மடு நகர் என்னும் இடத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து ஐந்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் அண்மைக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கிணற்றிலும் நீர்நிலைகளிலும் தவறிவீழ்ந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.