(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொவிட் 19 வைரசை கட்டுப்பத்துவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லாமையே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் காரணமாக நாட்டின் நிகழ்கால நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஇவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும் நகரில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இறக்கின்றனர். ஆனால் மரணப்பத்திரத்தில் கொவிட் என்றே எழுதப்படுகின்றது. ஆனால் அது சுகாதார அமைச்சின் ஆவணத்தில் பதிவாவதில்லை. அதன் பின்னர் நாட்டின் மரணவீதம் குறைவு என அறிக்கை விடுகின்றனர்.
அதனால் கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றார்கள், நிறைவேற்று அதிகாரம் தேவை என்றார்கள். அத்தனையும் வழங்கினாலும் வேலை தெரியாது என்றால் அதனை மேற்கொள்ள முடியாது என்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.
ஆரம்பத்தில் கொராேனாவை கட்டுப்படுத்தியபோது, வெளிநாடுகளை உதாரணம் காட்டுகின்றார்கள், ஆனால் நாங்கள் செய்ததை யாரும் கதைப்பதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இரண்டாவது அலை வந்தபோது, யுத்தத்தை கட்டுப்படுத்தியதுபோல் வைரசை கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றார். அவருக்கு முடியாது என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM