(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காணாத விதத்தில் கொவிட்-19  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்  என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டின் தற்போதைய நடைமுறைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று  பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருந்த நிலையில் விவாதத்தில் உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக காணப்படவில்லை, வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளோம். 

இன்று நாட்டில் பரவலாக வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை, பேலியகொடை கொத்தணியில் இருந்தே நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். எனவே வைரஸ் சமூக பரவலாக மாறும் நிலைமையை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். இதில் சகலரும் ஒன்றிணைந்து நாடாக மீள்வோம், இதற்கு சகலரதும் ஒத்துழைப்புகள் அவசியம் என்றார்.