முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு ஏ -35 பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் முழுமையாக திருத்தப்படாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
முல்லைத்தீவு - கோயில்குடியிருப்பு கிராமசேவையாளர் பிரிவு ஏ - 35 பிரதான வீதியில் காணப்படும் பாலம் மிகவும் சேதமடைந்திருந்த நிலையில் கடந்த மார்ச் 2017 ஆண்டு வீதி திருத்தும் பணி ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில், மூன்று வருடங்களை கடந்த நிலையிலும் இன்னும் அவ் வீதி புனரமைக்கப்படவில்லை.
இதனால் மழைக்காலங்களில் அவ் வீதியால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் முதல் அவ்வீதியால் பயணம் செய்யும் ஏனைய பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனினும் பாலத்தை புனரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வருடங்களை கடந்தும் மீள் புனரமைப்பு வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டிருப்பதுடன் குறித்த பாலத்தை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சீரான போக்குவரத்திற்கு வழியேற்படுத்தி தருமாறும் கோரியுள்ளனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM