தமது கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான முடிவு இதுவரை கிடைக்கப் பெறாதமையினால் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் நாளை மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 

உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினால் எந்தவொரு தீர்வும் பெறப்படவில்லையெனவும் அது தோல்வியிலேயே முடிவடைந்ததாகவும் இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார். 

சம்பள உயர்வு, ஊழியர்களின் காப்பீடு திட்டம், சேவை புரியும் காலத்தை 60 வயது வரை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  இம்மாதம் 13 ஆம் திகதி கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.