நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 373 கொரோனா நோயளர்களின் வரிசையில் கொழும்பில் மாத்திரம் 271 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் கம்பஹா மாட்டத்தில் இருந்து 46 புதிய கொரோனா தொற்றாளர்களும் , களுத்துறையில் 12 பேரும் , கேகாலையில் 10 பேரும் , கலியில் 04 பேர் உட்பட பொலன்னறுவையில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளம் , இரத்தினபுரி , ஹம்பாந்தோட்டை , மாத்தளை மாவட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு 20 பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததோடு , வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 04 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4834 கொரோனா நோயாளர்களும்,  கொழும்பு மாவட்டத்தில் இருந்து 4640 பேரும் கண்டறியப்பட்டதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்ததோடு , ஓக்டோடபர் 04 ஆம் திகதி முதல் களுத்துறையில் மொத்தம் 571 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.