அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக பைடனின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் ,

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்தின் பொதுவான பிணைப்புகளை ஊக்குவிப்பதில் அவரது புனிதத்துவத்தின் தலைமைக்கு பாப்பரசர் பாராட்டியுள்ளதாக ஜோ பைடனின் நிர்வாக மாற்றம் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஓரங்கட்டப்பட்டவர்களையும் ஏழைகளையும் கவனித்தல், காலநிலை மாற்றத்தின் நெருக்கடியை நிவர்த்தி செய்தல், புலம்பெயர்ந்தோரை வரவேற்பது மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளில் அனைத்து மனித இனத்தின் கௌரவம் மற்றும் சமத்துவம் குறித்த பகிரப்பட்ட நம்பிக்கையை முன்னெடுக்க பாப்பரசரோடு ஒத்துழைக்க தனது விருப்பத்தையும் பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது கத்தோலிக்கர் பைடன் ஆவார். ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோன் எப் கென்னடி 1960 இல் வெள்ளை மாளிகையை வென்ற முதலாவது கத்தோலிக்கர் என வொய்ஸ் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த வாரம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜேர்மன் ஜனாதிபதி அங்கேலா மேர்க்கெல், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருடன் பேசியுள்ளார்.

பைடன் மூன்றாவது தடைவையாக கடுமையாக போட்டியிட்டு தேர்தலில் ட்ரம்பை தோற்கடித்துள்ளார்.