அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயாரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சபம்வத்தில் உயிழந்தவர் காளி கிட்னம்மாள் (65 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக மேற்படி தோட்டத்திற்கு சென்றுள்ளார் நீண்ட நேரம் அவர் வருகை தராமையினால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், மிருகங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM