இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு உத்தியோக பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக தயாராகியிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமானது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு யூடியூப் மற்றும் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பொங்கல் முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்ற தகவல் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM